மாவட்ட செய்திகள்

ராமேசுவரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை + "||" + Sri Lankan Navy chases Rameswaram fishermen

ராமேசுவரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை

ராமேசுவரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை
நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். மீன்பிடி வலைகளையும் அறுத்து வீசினர்.
ராமேசுவரம்,

நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். மீன்பிடி வலைகளையும் அறுத்து வீசினர்.

ராமேசுவரம் மீனவர்கள்

ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 400-க்கும் அதிகமான விசைப்படகுகளில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது 3 ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரத்தை சேர்ந்த மீன்பிடி படகுகளை மீன்பிடிக்க விடாமல் எச்சரித்தனர்.

விரட்டியடிப்பு

கடலில் விரித்திருந்த வலைகளையும் அறுத்து வீசி எறிந்ததாக கூறப்படுகிறது.   அங்கிருந்து விரயடிக்கப்பட்டதால் மீனவர்கள் பாதியிலேயே கரையை நோக்கி திரும்பினர். நேற்று காலை குறைந்த அளவிலான மீன்களுடன் ராமேசுவரம் வந்தனர். 
இலங்ைக கடற்படை அத்துமீலை தடுத்து, பாரம்பரிய கடல் பகுதியில் எந்த இடையூறும் இன்றி தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்று ராமேசுவரம் மீனவர்கள் வலியறுத்தி உள்ளனர்.