கோவை செட்டிபாளையத்தில் வருகிற 21-ந் தேதி அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் என்றும் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்றும் கலெக்டர் சமீரன் தெரிவித்தார்.

கோவை செட்டிபாளையத்தில் வருகிற 21-ந் தேதி அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் என்றும் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்றும் கலெக்டர் சமீரன் தெரிவித்தார்.
x
தினத்தந்தி 13 Jan 2022 4:50 PM GMT (Updated: 13 Jan 2022 4:50 PM GMT)

கோவை செட்டிபாளையத்தில் வருகிற 21-ந் தேதி அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் என்றும் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்றும் கலெக்டர் சமீரன் தெரிவித்தார்.

கோவை

கோவை செட்டிபாளையத்தில் வருகிற 21-ந் தேதி அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் என்றும் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்றும் கலெக்டர் சமீரன் தெரிவித்தார்.

21-ந் தேதி ஜல்லிக்கட்டு

கோவையில் ஜல்லிக்கட்டு நடைபெறும் மைதானத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கலெக்டர் சமீரன் நேற்று ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கடும் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தமிழக அரசால் உத்தரவிடப்பட்டு உள்ளது. இதன்படி கோவை மாவட்டத்தில் வருகிற 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் மைதானம் 64 ஏக்கர் பரப்பளவில் அமைந்து உள்ளது. இதில் 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை

காலை 8 மணி முதல் மாலை 5 வரை நடைபெறும். ஜல்லிக்கட்டு போட்டியில் 500 காளைகள் பங்கேற்க உள்ளன. அவசர சிகிச்சை அளிக்க மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருப்பார்கள்.

ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டும். போட்டியில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்கள் 2 தவணை தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் மற்றும் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட 'கொரோனா தொற்று இல்லை' என்ற சான்றிதழ் கட்டாயமாக வைத்து இருக்க வேண்டும்.

கோவை மாவட்டத்தில் 'கோவை ஜல்லிக்கட்டு அமைப்பு' சார்பில் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. இதை மாவட்ட நிர்வாகம் முழுமையாக கண்காணிக்கும்.

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மட்டுமே தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் ரேக்ளா உள்ளிட்ட பிற போட்டிகளுக்கு அனுமதி கிடையாது. கால்நடை மருத்துவர்கள் மூலம் காளை மாடுகளுக்கு பரிசோதனை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

2,000 போலீசார் பாதுகாப்பு

முன்னதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் கூறுகையில், கோவையில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்காக பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளனர், என்றார்.

Next Story