மாவட்ட செய்திகள்

2 கார்கள் மோதிக்கொண்டதில் பெண் பலி + "||" + Woman killed in 2 car collision

2 கார்கள் மோதிக்கொண்டதில் பெண் பலி

2 கார்கள் மோதிக்கொண்டதில் பெண் பலி
2 கார்கள் மோதிக்கொண்டதில் பெண் பலி
செய்யாறு

2 கார்கள் மோதிக்கொண்டதில் பெண் பலியானார்.

வந்தவாசி-அச்சரப்பாக்கம் சாலையைச் சேர்ந்தவர் உசேன். இவரின் மனைவி ஷம்முபீவி (வயது 38). இவர் தனது உறவினர் வீடான மீஞ்சூருக்கு சென்றிருந்தார். இவருடைய தங்கை மகன் அசார் (20) என்பவரின் காரில் ஷம்முபீவி தனது தாய் வீடான வந்தவாசிக்கு வந்து கொண்டிருந்தார். அவருடன் ஷம்முபீவியின் மகன் காதர்பாஷாவும் வந்தார். 

தேத்துறை கிராம ஏரிக்கரையில் கார் வந்தபோது அந்த வழியாக எதிேர திருவண்ணாமலையில் இருந்து சென்னையை நோக்கி சென்னை கொளத்தூரைச் சேர்ந்த சந்திரன் (65) என்பவர் ஒரு காரில் வந்து கொண்டிருந்தார். ஏரிக்கரையின் ஓரிடத்தில் இரு கார்களும் நேருக்கு நேர் மோதி கொண்டன. 

இந்த விபத்தில் ஷம்முபீவியும், அசாரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை, அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் ஷம்முபீவியை மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே ஷம்முபீவி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அனக்காவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.