மாவட்ட செய்திகள்

ராணிப்பேட்டை அருகே காதலி தூக்குப்போட்டு தற்கொலை செய்ததால் காதலனும் சாவு + "||" + The boyfriend also died because his girlfriend committed suicide by hanging

ராணிப்பேட்டை அருகே காதலி தூக்குப்போட்டு தற்கொலை செய்ததால் காதலனும் சாவு

ராணிப்பேட்டை அருகே காதலி தூக்குப்போட்டு தற்கொலை செய்ததால் காதலனும் சாவு
ராணிப்பேட்டை அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலர்கள் தனித்தனியே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலர்கள் தனித்தனியே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

காதலி தூக்குப்போட்டு தற்கொலை

ராணிப்பேட்டை மாவட்டம், அம்மூரை அடுத்த வேலம் புதூர் பகுதியை சேர்ந்தவர் சந்தியா (வயது 17). பிளஸ்-2 படித்து வந்தார். அதே ஊரைச் சேர்ந்தவர் கதிர்வேலு (23). கேட்டரிங் படித்துள்ளார். சந்தியாவும், கதிர்வேலுவும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு சந்தியாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து, கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த சந்தியா கடந்த 11-ந் தேதி வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுபற்றி தகவல் அறிந்ததும் ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சந்தியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலனும் உயிரை மாய்த்தார்

சந்தியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கேள்விப்பட்ட சந்தியாவின் காதலன் கதிர்வேலு அதிர்ச்சியடைந்தார். காதலி தற்கொலை செய்து கொண்டதால் அவரும் அங்குள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இதுகுறித்து தகவலறிந்ததும் சோளிங்கர் போலீசார் சென்று கதிர்வேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலர்கள், ஒரே நாளில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.