மாவட்ட செய்திகள்

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் + "||" + Public road block asking for drinking water

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரியலூர்:
அரியலூர் அண்ணா நகரில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த ஒரு வாரமாக இந்த பகுதியில் குடிநீர் வினியோகம் சரியாக செய்யப்படவில்லை. பொங்கல் பண்டிகை வருவதால் வீடுகளை சுத்தம் செய்வதற்கும், வெள்ளை அடிப்பதற்கும் வழக்கத்தைவிட அதிக அளவில் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் தண்ணீர் வரவே இல்லை என்று கூறி அப்பகுதி மக்கள் சாலையில் அமர்ந்து காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஆகியோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மோட்டார் சரி செய்யப்பட்டு உடனடியாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பொங்கல் பரிசு தொகுப்பு முறையாக வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
திட்டக்குடி அருகே பொங்கல் பரிசு தொகுப்பு முறையாக வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
2. குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
3. குளித்தலை அருகே குப்பைகளை அகற்றக்கோரி பொதுமக்கள் மறியல்
குளித்தலை அருகே வளையப்பட்டியில் நெகிழி குப்பைகளை அகற்றக்கோரி பொதுமக்கள் மறியல் ஈடுபட்டனர்.
4. குடிநீர் வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
குடிநீர் வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
5. பேரையூரில் 10 கிராம மக்கள் சாலை மறியல்
தடுப்பணையில் மணல் அள்ளுவதை தடுக்கக்கோரி பேரையூரில் 10 கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.