குமரியில் புதிதாக 538 பேருக்கு கொரோனா


குமரியில் புதிதாக 538 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 13 Jan 2022 6:46 PM GMT (Updated: 13 Jan 2022 6:46 PM GMT)

குமரி மாவட்டத்தில் புதிதாக 538 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ேமலும் கேரளாவில் இருந்து வந்த 4 பேருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.

நாகர்கோவில், 
குமரி மாவட்டத்தில் புதிதாக 538 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ேமலும் கேரளாவில் இருந்து வந்த 4 பேருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.
கொரோனா பரவல்
குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. 400-ஐ தாண்டியபடி தொற்று உள்ளது.
நேற்று முன்தினம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி மூலமாகவும், சோதனை சாவடிகள் மற்றும் கள பணியாளர்கள் மூலமாகவும் மொத்தம் 3,958 பேருக்கு சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக நாகர்கோவிலில் 133 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கேரளாவில் இருந்து
இதே போல அகஸ்தீஸ்வரம்-53, கிள்ளியூர்-35, குருந்தன்கோடு-26, மேல்புறம்-24, முன்சிறை-56, ராஜாக்கமங்கலம்-31, திருவட்டார்-29, தோவாளை-39, தக்கலை-42 மற்றும் தூத்துக்குடி, திருநெல்வேலியில் இருந்து வந்த தலா ஒருவருக்கும் தொற்று உறுதியாகி இருக்கிறது. அதோடு கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு களியக்காவிளை சோதனை சாவடியில் சளி பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
அவ்வாறு பரிசோதனை செய்ததில் நேற்று முன்தினம் கேரளாவில் இருந்து வந்த 4 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையும் சேர்த்து குமரி மாவட்டத்தில் மொத்தம் 538 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் நோய் தொற்று அதிகம் உள்ளவர்கள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளிலும், தொற்று பாதிப்பு குறைவாக உள்ளவர்கள் வீடுகளிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
8 ஊழியர்கள் பாதிப்பு
நாகர்கோவில் மாநகரை பொறுத்த வரையில் பாதிப்பு சற்று அதிகமாகவே உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அருகே உள்ள ஒரு தனியார் நிதி நிறுவன ஊழியர்களுக்கு சளி பரிசோதனை நடந்தது.
அதற்கான பரிசோதனை முடிவுகள் நேற்று முன்தினம் மாலையில் வெளியாகின. அப்போது நிதி நிறுவனத்தில் 8 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் உத்தரவுப்படி மாநகர் நல அதிகாரி விஜயசந்திரன் மேற்பார்வையில் நிதி நிறுவனத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம் தற்காலிகமாக மூடப்பட்டது. இதே போல இரணியல் அருகே குழந்தைகள் நல டாக்டர் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

Next Story