தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடு கிடு உயர்வு;பிச்சி கிலோ ரூ.3,000-க்கு விற்பனை


தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடு கிடு உயர்வு;பிச்சி கிலோ ரூ.3,000-க்கு விற்பனை
x
தினத்தந்தி 13 Jan 2022 6:59 PM GMT (Updated: 13 Jan 2022 6:59 PM GMT)

பொங்கல் பண்டிகையையொட்டி தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடு கிடுவென உயர்ந்து காணப்பட்டது. அதன்படி பிச்சி கிலோ ரூ.3000-க்கு விற்பனையானது.

ஆரல்வாய்மொழி, 
பொங்கல் பண்டிகையையொட்டி தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடு கிடுவென உயர்ந்து காணப்பட்டது. அதன்படி பிச்சி கிலோ ரூ.3000-க்கு விற்பனையானது.
பூ மார்க்கெட்
ஆரல்வாய்மொழி அருகே தோவாளையில் பூ மார்க்கெட் உள்ளது. மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. 
அவ்வாறு கொண்டு வரப்படும் பூக்களை உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்கின்றனர். மேலும், இங்கிருந்து வெளி நாடுகளுக்கும் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 
பிச்சி ரூ.3000-க்கு...
இந்தநிலையில் இன்று(வெள்ளிக்கிழமை) பொங்கல் பண்டிகை என்பதால் மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் கிலோ ரூ.2000-க்கு விற்பனையான பிச்சி ரூ.1000 உயர்ந்து ரூ.3000-க்கு விற்பனையானது. இதேபோல், ரூ.1900-க்கு விற்பனையான முல்லை ரூ.1000 உயர்ந்து ரூ.2900-க்கும், ரூ.1700-க்கு விற்பனையான மல்லிகை ரூ.300 உயர்ந்து ரூ.2000-க்கும் விற்பனையானது.
விலை உயர்வு குறித்து பூவியாபாரி கிருஷ்ணகுமார் கூறுகையில்,
பொங்கல் பண்டிகையையொட்டி சுமார் 50 டன் பூக்கள் சேலம், ஓசூர், "ராயகோட்டை, நிலக்கோட்டை, திண்டுக்கல், நெல்லை உள்ளிட்ட இடங்களிலிருந்து வந்து குவிந்தன. அவற்றை பொதுமக்களும், வியாபாரிகளும் ஆர்வத்துடன் போட்டி போட்டு வாங்கிச் சென்றதால் பூக்கள் விலை உயர்ந்தது. இதனால், மார்க்கெட்டுக்கு வந்த அனைத்து பூக்களும் விற்று தீர்ந்தன" என்றார். 
விலை விவரம்
 மார்க்கெட்டில் விற்பனையான மற்ற பூக்களின் விலை விவரம் கிலோவில் வருமாறு:-
அரளி ரூ.300, சம்பங்கி ரூ.125, கனகாம்பரம் ரூ.500, வாடாமல்லி ரூ.150, துளசி ரூ.40, தாமரை (ஒரு எண்ணம்) ரூ.10, கோழிப்பூ ரூ.100, பச்சை (ஒரு கட்டு)ரூ.10, ரோஸ் பாக்கெட்(100 எண்ணம்)ரூ.30, பட்டன் ரோஸ் ரூ.150, ஸ்டம்ப் ரோஸ்(ஒரு கட்டு) ரூ.250, மஞ்சள் கிரேந்தி ரூ.60, சிவப்புக்கிரேந்தி ரூ.65, மஞ்சள் சிவந்தி ரூ.200, வெள்ளை சிவந்தி ரூ.230, கொழுந்து ரூ.200, மரிக்கொழுந்து ரூ.150 என விற்பனையானது. 
---

Next Story