மாவட்ட செய்திகள்

தலைமை ஆசிரியர் தற்கொலை; டாக்டர் உள்பட 6 பேர் மீது வழக்கு + "||" + Police have registered a case against 6 persons, including a doctor, in connection with the suicide of a school headmaster in Palayankottai.

தலைமை ஆசிரியர் தற்கொலை; டாக்டர் உள்பட 6 பேர் மீது வழக்கு

தலைமை ஆசிரியர் தற்கொலை; டாக்டர் உள்பட 6 பேர் மீது வழக்கு
பாளையங்கோட்டையில் பள்ளி தலைமை ஆசிரியர் தற்கொலை தொடர்பாக டாக்டர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
நெல்லை:
பாளையங்கோட்டை ரகுமத் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாம்சன் (வயது 56). அரசு உதவிபெறும் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றிய இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்தார். இவரிடம் கடனாக பணத்தை பெற்ற பலரும் மொத்தம் ரூ.3 கோடி வரையிலும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சாம்சன் கடந்த 11-ந்தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சாம்சனின் மனைவி மேரி விக்டோரியா அளித்த புகாரின்பேரில், டாக்டர் உள்பட 6 பேர் மீது பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.