நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் ரூ.10 கோடிக்கு மது விற்பனை


நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் ரூ.10 கோடிக்கு மது விற்பனை
x
தினத்தந்தி 15 Jan 2022 3:55 PM GMT (Updated: 15 Jan 2022 3:55 PM GMT)

பொங்கல் பண்டிகையையொட்டி நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் ரூ.10 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது. இதுகடந்த ஆண்டை விட ரூ.2 கோடி அதிகமாகும்.

வெளிப்பாளையம்:
பொங்கல் பண்டிகையையொட்டி நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் ரூ.10 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது. இதுகடந்த ஆண்ட விட ரூ.2 கோடி அதிகமாகும்.
பொங்கல் பண்டிகை
பொங்கல் பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. தற்போது பண்டிகை என்றாலே அதில் மதுவும் முக்கிய இடத்தை பிடித்து வருகிறது. மதுப்பிரியர்கள் பண்டிகையை வழக்கத்தை விட அதிகமாக மது அருந்தி கொண்டாடுகிறார்கள். நாகை மாவட்டத்தில் 57 டாஸ்மாக் கடைகளும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 44 டாஸ்மாக் கடைகளும் செயல்பட்டு வருகின்றன.
இந்த டாஸ்மாக் கடைகள் மூலம் தினமும் சராசரியாக ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரை மது விற்பனை நடந்து வருகிறது. பண்டிகை காலங்களில் அதுவும் குறிப்பாக தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற நாட்களில் மதுவிற்பனை 2 மடங்கு வரை அதிகரித்து வருகிறது. 
ரூ.9 கோடியே 99 லட்சம்
பொங்கல் பண்டிகையையொட்டி திருவள்ளுவர் தினம், தைப்பூசம் உள்ளிட்ட நாட்களில் டாஸ்மாக் கடைகள் விடுமுறை என்பதால் மது பிரியர்கள் முன்கூட்டியே மதுபானங்கள் வாங்கி வைத்து விடுகின்றனர்.  பொங்கல் பண்டிகையையொட்டி நாகை மாவட்டத்தில் உள்ள 57 டாஸ்மாக் கடைகளிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 44 கடைகளிலும் சேர்த்து மொத்தம் ரூ.9 கோடியே 99 லட்சத்து 31 ஆயிரத்து 560-க்கு மது விற்பனை செய்யப்பட்டது. 
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.2 கோடிக்கு அதிகம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Next Story