‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-


‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
x
தினத்தந்தி 15 Jan 2022 8:08 PM GMT (Updated: 15 Jan 2022 8:08 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டி

மின்கம்பம் மாற்றம் 
சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியம் சின்ன சீரகாபாடி சிற்றூர் கணபதி நகரில் சாக்கடை கால்வாய் நடுவே மின்கம்பம் ஒன்று நின்றது. இந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழலாம் என்ற நிலையில் இருந்தது. இதுதொடர்பாக ‘தினத்தந்தி’ புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதைதொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்தனர். அந்த மின்கம்பத்தை சாக்கடை கால்வாயில் இருந்து மின்கம்பத்தை மாற்றி அமைத்துள்ளனர். இதற்கு அந்த பகுதி மக்கள் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ க்கும் பாராட்டு தெரிவித்தனர்.
-கணபதி நகர் பொதுமக்கள், சின்னசீரகாபாடி, சேலம்.
===

தெருவிளக்கு எரியவில்லை
சேலம் மாவட்டம் எட்டிக்குட்டப்பட்டி ஊராட்சியில் 6 மாதங்களாக தெருவிளக்கு எரியவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுபற்றி பல முறை மனு கொடுத்தும் இன்று வரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருவிளக்கு எரியச் செய்யவேண்டும்.
-மோகன், எட்டிக்குட்டப்பட்டி ,சேலம்.
===
பழுதடைந்த குடிநீர் குழாய்
நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா லத்துவாடி கிராமம் வடக்காலப்புதூரில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி பல  ஆண்டுகளாக பராமரிப்பு பணி செய்யாமல் குழாய்கள் பழுதடைந்து குடிநீர் வீணாகிறது. இதுபற்றி பல மாதங்களாக கோரிக்கை அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் குடிநீர் வீணாவதை தவிர்க்கலாம்.
-ஊர்பொதுமக்கள், வடக்காலப்புதூர், நாமக்கல்.
===
குடிநீர் வருமா?
சேலம் மாநகராட்சி 8-வது வார்டு காமராஜர் நகர் 2-வது தெருவில் 15 நாட்களாக குடிநீர் வருவதில்லை. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். குடிநீர் தேடி நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து அப்பகுதி மக்களின் தண்ணீர் பிரச்சினையை தீர்க்கவேண்டும்.
-பிரசன்னா, காமராஜர்நகர், சேலம்.

சாக்கடை கால்வாய் மூடி சீரமைக்கப்படுமா? (படம் உண்டு)
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையை அடுத்த வெங்கடார் காலனியில் உள்ள சாலையின் குறுக்கே செல்லும் சாக்கடை கால்வாய் மூடி சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் அச்சப்படுகின்றனர். இதுபற்றி புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாக்கடை கால்வாயை மூடியை சரி செய்வார்களா?
-ஊர்மக்கள், வெங்கடார் காலனி, நாமக்கல்.

குப்பை தொட்டி வேண்டும்
சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா சப்பாணிப்பட்டிஅருந்ததியர் ஊரில் குப்பை தொட்டி இல்லாததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அந்த பகுதியில் குப்பைகள் ஆங்காங்கே குவிந்துள்ளதால் துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மக்களின் நலன் கருதி குப்பை தொட்டி வைத்து அதை முறையாக அகற்ற முன்வருவார்களா?
-சிவா, சப்பாணிப்பட்டி அருந்ததியர், சேலம்.
===
தண்ணீர் இல்லாத பொதுக்கழிப்பிடம்
சேலம் மாநகராட்சி 2-வது வார்டு ஜாகீர் அம்மாபாளையம் எட்டிகுட்டை தெருவில் பொதுக்கழிப்பிடம் உள்ளது. இந்த கழிப்பிடத்தில் உள்ள மின் மோட்டார் பழுதடைந்து 2 வாரங்களுக்கு மேல் ஆகிறது. இதனால் தண்ணீர் இல்லாமல் கழிப்பறையை பயன்படுத்த முடியாமல் இருக்கிறது. குறிப்பாக பெண்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகிறார்கள். எனவே பொதுமக்களின் நலன் கருதி மாநகராட்சி அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து பழுதடைந்த மின்மோட்டாரை சரிசெய்து கழிப்பிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
-சதீஷ், ஜாகீர் அம்மாபாளையம், சேலம்.
===

Next Story