கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 16 Jan 2022 4:43 PM GMT (Updated: 2022-01-16T22:13:10+05:30)

கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலியானார்.

கரூர்
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிட்டுள்ள பட்டியலில் புதிதாக 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த 15 பேர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். தற்போது 423 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story