ஊரடங்கை மீறியவர்களுக்கு கொரோனா பரிசோதனை


ஊரடங்கை மீறியவர்களுக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 16 Jan 2022 6:17 PM GMT (Updated: 2022-01-16T23:47:55+05:30)

திசையன்விளையில் ஊரடங்கை மீறியவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

திசையன்விளை:
திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமசாமி, சுகாதார ஆய்வாளர் அஸ்வின், சுகாதார செவிலியர் விக்டோரியா மற்றும் சுகாதார பணியாளர்கள் நேற்று திசையன்விளை பஸ் நிலையம் அருகில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். 
அப்போது முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பது தெரிந்தும் தேவை இல்லாமல் வெளியில் சுற்றிய 80 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். சிலர் பரிசோதனை செய்வதை அறிந்து ஓட்டம் பிடித்தனர்.

Next Story