பஸ் மோதி இளம்பெண் சாவு


பஸ் மோதி இளம்பெண் சாவு
x
தினத்தந்தி 16 Jan 2022 7:03 PM GMT (Updated: 2022-01-17T00:33:56+05:30)

பஸ் மோதி இளம்பெண் சாவு

பேரையூர், 
விருதுநகர் காமராஜர் நகரை சேர்ந்தவர் நிக்சன்பிரபாகரன் (வயது 34). இவரது மனைவி சசிகலா (25). இவர்களுக்கு ஜாக்குலின் பிரபா (2) என்ற மகள் உள்ளாள். இந்நிலையில் அவர்கள் 3 பேரும் மோட்டார்சைக்கிளில் மதுரை மாவட்டம் பேரையூரில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக டி.கல்லுப்பட்டி-பேரையூர் சாலையில் சென்று கொண்டிருந்தனர். கிளாங்குளம் விலக்கு அருகே சென்ற போது பின்னால் வந்த அரசு பஸ், மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர்கள் 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு அதே அரசு பஸ்சில் ஏற்றி பேரையூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு் மேல் சிகிச்சைக்காக அவர்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் சசிகலா பரிதாபமாக இறந்தார். இது குறித்து டி. கல்லுப்பட்டி போலீசார், அரசு பஸ் டிரைவரான தேனியை சேர்ந்த சந்தானம் (34) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story