பெண்ணிடம் நகை பறிப்பு


பெண்ணிடம் நகை பறிப்பு
x
தினத்தந்தி 19 Jan 2022 5:01 PM GMT (Updated: 2022-01-19T22:31:03+05:30)

பெண்ணிடம் நகை பறிப்பு

மதுரை,
மதுரை கீரைத்துறை புதுமாகாளிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவருடைய மனைவி சாந்தி (வயது 50). சம்பவத்தன்று இவர், மாகாளிப்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் அவர் அணிந்திருந்த 3¾ பவுன் தங்க நகையை பறித்து விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
========

Next Story