குமாரபாளையத்தில் லாரிகள் மோதல்; சாலையில் சிதறி கிடந்த கண்ணாடி துண்டுகள் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


குமாரபாளையத்தில் லாரிகள் மோதல்; சாலையில் சிதறி கிடந்த கண்ணாடி துண்டுகள் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 19 Jan 2022 6:04 PM GMT (Updated: 19 Jan 2022 6:04 PM GMT)

குமாரபாளையத்தில் லாரிகள் மோதி கொண்ட விபத்தில் சாலையில் கண்ணாடி துண்டுகள் சிதறி விழுந்தன. இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குமாரபாளையம்:
குமாரபாளையத்தில் லாரிகள் மோதி கொண்ட விபத்தில் சாலையில் கண்ணாடி துண்டுகள் சிதறி விழுந்தன. இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கண்ணாடி பாட்டில்கள்
ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து கோவையில் உள்ள மதுபான ஆலைக்கு காலி கண்ணாடி பாட்டில்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி புறப்பட்டது. இந்த லாரிைய செங்கோட்டையன் என்பவர் ஓட்டினார். லாரி சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்து கொண்டிருந்தது. அப்போது பின்னால் சென்னையில் இருந்து கோவை சிப்காட் தொழிற்பேட்டை கிடங்கிற்கு அடுப்புக்கறி பாரம் ஏற்றிய லாரி வந்து கொண்டிருந்தது. இதனை இளங்கோவன் என்பவர் ஓட்டி வந்தார்.
நேற்று அதிகாலையில் குமாரபாளையம் அருகே எதிர்மேடு என்ற பகுதியில் வந்த போது எதிர்பாராதவிதமாக கண்ணாடி பாட்டில்கள் லாரி மீது அடுப்புக்கறி ஏற்றி வந்த லாரி மோதியது. இதனால் லாரியில் இருந்த காலி கண்ணாடி பாட்டில்கள் தேசிய நெடுஞ்சாலையில் சிதறி விழுந்து உடைந்தது. 
போக்குவரத்து பாதிப்பு
இதனால் சாலை முழுவதும் பாட்டில்கள் சிதறி உடைந்து துகள்களாகக கிடந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குமாரபாளையம் போலீசார் உடனடியாக லாரி டிரைவர்களுடன் இணைந்து சிதறிய பாட்டிலின் கண்ணாடி துண்டுகளை அப்புறப்படுத்தினர்.
இந்த விபத்தில் லாரி டிரைவர் இளங்கோவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்து காரணமாக சுமார் 2 மணி நேரமாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story