திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் வாசலில் சிவலிங்கம் வடிவில் 1008 விளக்கேற்றி வழிபாடு


திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் வாசலில் சிவலிங்கம் வடிவில் 1008 விளக்கேற்றி வழிபாடு
x
தினத்தந்தி 20 Jan 2022 2:33 PM GMT (Updated: 2022-01-20T20:03:08+05:30)

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் வாசலில் சிவலிங்கம் மற்றும் நந்தி, சூலம் வடிவில் 1008 விளக்கேற்றி திருவாசகம் படித்து வழிபாடு செய்தனர்.

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொேரானா வைரஸ் நோய் தொற்று பாதுகாப்பு நடவடிக்கையாக கடந்த 14-ந் தேதி முதல் 18-ந்தேதி வரை கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு இருந்தது. தைப்பூசத் திருநாளான நேற்று முன்தினம் பக்தர்கள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய முடியாததால் கோவில் வாசலில் நின்று வழிபாடு செய்தனர்.

இந்த நிலையில் மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா நோய் தொற்றில் இருந்து விடுபட வேண்டி திருவொற்றியூர் அடியார்கள் திருக்குழுவை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட சிவனடியார்கள், 48 நாட்கள் திருவாசகம் விண்ணப்பம் முடிவடைந்து திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் வாசலில் சிவலிங்கம் மற்றும் நந்தி, சூலம் வடிவில் 1008 விளக்கேற்றி திருவாசகம் படித்து வழிபாடு செய்தனர். தைப்பூசம் நாளில் கோவில் வாசலில் ஜோதி வடிவில் காட்சியளித்த சிவலிங்கத்தை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.


Next Story