இரவு நேர ஊரடங்கால் ஈரோட்டுக்கு வெளிமாநில வியாபாரிகள் வராததால் ரூ.150 கோடி ஜவுளிகள் தேக்கம்


இரவு நேர ஊரடங்கால் ஈரோட்டுக்கு வெளிமாநில வியாபாரிகள் வராததால் ரூ.150 கோடி ஜவுளிகள் தேக்கம்
x
தினத்தந்தி 20 Jan 2022 3:45 PM GMT (Updated: 20 Jan 2022 3:45 PM GMT)

இரவு நேர ஊரடங்கால் ஈரோட்டுக்கு வெளிமாநில வியாபாரிகள் வராததால் ரூ.150 கோடி ஜவுளிகள் தேக்கம் அடைந்துள்ளது.

இரவு நேர ஊரடங்கால் ஈரோட்டுக்கு வெளிமாநில வியாபாரிகள் வராததால் ரூ.150 கோடி ஜவுளிகள் தேக்கம் அடைந்துள்ளது.
ஜவுளி சந்தை
ஈரோட்டில் நடைபெறும் தினசரி மற்றும் வார ஜவுளி சந்தைகள் தென்னிந்திய அளவில் மிகவும் புகழ்பெற்றவை. இங்கு குறைவான விலையில் இருந்து அதிக விலை வரை அனைத்து ஜவுளி ரகங்களும் கிடைப்பதால் தமிழகத்தை சேர்ந்த வியாபாரிகள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம் உள்ளிட்ட வெளிமாநில வியாபாரிகளும் அதிக அளவில் ஜவுளிகளை வாங்கி
செல்வது வழக்கம்.
இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. இதன் காரணமாக ஈரோடு ஜவுளி சந்தைகளில் பொங்கல் விற்பனையானது பெரிதும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள கனி மார்க்கெட், அசோகபுரம் ஜவுளி சந்தைகளில் மொத்த மற்றும் சில்லரை விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோடிக்கணக்கான மதிப்பில் துணிகள் தேக்கம் அடைந்துள்ளது.
ரூ.150 கோடி ஜவுளிகள் தேக்கம்
இது குறித்து ஜவுளி வியாபாரிகள் கூறியதாவது:-
இரவு நேர ஊரடங்கால் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு பொங்கல் வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. நூல் விலை ஏற்றம், இரவு நேர ஊரடங்கு காரணமாக ஜவுளி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வெளிமாநில வியாபாரிகள் வராததால் பொங்கலுக்கு தயார் செய்யப்பட்ட ஆடைகள் அனைத்தும் தேக்கம் அடைந்து உள்ளது. சுமார் ரூ.150 கோடி மதிப்பிலான ஜவுளிகள் தேக்கம் அடைந்து உள்ளதால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். இனிவரும் நாட்களிலும் இதே நிலை நீடிக்கும் என்பதால் எங்கள் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story