20 பேருக்கு கொரோனா தொற்று


20 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 20 Jan 2022 5:17 PM GMT (Updated: 2022-01-20T22:47:59+05:30)

20 பேருக்கு கொரோனா தொற்று

நீடாமங்கலம்:-

நீடாமங்கலம் ஒன்றியத்தில் ஜனவரி 1-ந் தேதி முதல் நேற்று வரை 100-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். சிகிச்சை முடிந்தவர்கள் அவரவர் வீட்டிலேயே தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். நேற்று நீடாமங்கலம் ஒன்றியத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் மன்னார்குடி, திருவாரூர் ஆகிய இடங்களில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தொற்று ஏற்பட்டவர்களின் குடியிருப்பு பகுதிகளில் தேவையான சுகாதார நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக வட்டார மருத்துவ அலுவலர் டாகடர் ராணிமுத்துலட்சுமி தெரிவித்துள்ளார்.

Next Story