முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி முகாம்


முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 20 Jan 2022 5:44 PM GMT (Updated: 20 Jan 2022 5:44 PM GMT)

சூளகிரியில் நடந்த முன்கள பணியாளர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி முகாமை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சூளகிரி:-
சூளகிரியில் நடந்த முன்கள பணியாளர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி முகாமை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பூஸ்டர் தடுப்பூசி
சூளகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முன் களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் கோவிந்தன், துணை ஆட்சியர் (பயிற்சி) அபிநயா உள்பட பலர் உடன் இருந்தனர்.
முன்கள பணியாளர்கள்
பின்னர் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-
"கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக சுகாதாரத்துறை, உள்ளாட்சித் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, காவல்துறை உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் முன்களப்பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டு 9 மாதங்கள் அல்லது 273 நாட்கள் முடிந்தவர்களுக்கு இந்த பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி நமது மாவட்டத்தில் நடந்து வருகிறது. நேற்று வரை 1,606 பேர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். முன் களப்பணியாளர்கள் அனைவரும் மற்றும் பொதுமக்கள் தொடர்பில் உள்ள அரசுத்துறை அலுவலர்கள் 3-வது தவணை, தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.

Next Story