தமிழ் வளர்ச்சித் துறை பணியாளர்களுக்கு ஆட்சிமொழி பயிலரங்கம்


தமிழ் வளர்ச்சித் துறை பணியாளர்களுக்கு  ஆட்சிமொழி பயிலரங்கம்
x
தினத்தந்தி 20 Jan 2022 5:44 PM GMT (Updated: 2022-01-20T23:14:23+05:30)

தமிழ் வளர்ச்சித்துறை பணியாளர்களுக்கு ஆட்சிமொழி பயிலரங்கம் நடந்தது.

கிருஷ்ணகிரி:-
தமிழ் வளர்ச்சித்துறை பணியாளர்களுக்கு ஆட்சிமொழி பயிலரங்கம் நடந்தது.
பயிலரங்கம்
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக, அரசு துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கத்தை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தொடங்கி வைத்தார்.
தமிழ் மொழியின் தொன்மை மற்றும் ஆட்சிமொழியின் இன்றியமையாமை குறித்தும், அரசு அலுவலகங்களில் அலுவலர்கள், பணியாளர்கள் அனைவரும் தமிழில் கையொப்பமிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
பிழையின்றி எழுதுவது
ஆட்சிமொழி வரலாறு, சட்டம், ஆட்சிமொழி ஆய்வும், குறைகளை களைவது குறித்த நடவடிக்கைகளும் மொழிப்பயிற்சி எனும் தலைப்பில் தமிழ் மொழியில் பிழையின்றி எழுதுவது, இலக்கணம் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட உதவி இயக்குனர் க.பவானி, முன்னாள் தமிழ் வளர்ச்சித் உதவி இயக்குனர் ப.ஆறுமுகம், முன்னாள் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் ப.கோவிந்தராசு மற்றும் அனைத்து துறை அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story