பெரம்பலூரில் 1,205 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி


பெரம்பலூரில் 1,205 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி
x
தினத்தந்தி 20 Jan 2022 6:09 PM GMT (Updated: 20 Jan 2022 6:09 PM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில் 1,205 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

பெரம்பலூர், 
கொரோனா தடுப்பூசி
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் இதுநாள் வரை 18 வயதிற்கு மேற்பட்டவர்களில் 3 லட்சத்து 92 ஆயிரத்து 793 பேருக்கு கொரோனா தடுப்பூசி முதல் தவணை போடப்பட்டுள்ளது. 2-வது தவணையாக கொரோனா தடுப்பூசி 2 லட்சத்து 83 ஆயிரத்து 823 பேருக்கு போடப்பட்டுள்ளது.
தற்போது கடந்த 3-ந் தேதி முதல் 15 முதல் 18 வயது நிரம்பியவர்களுக்கு கோவாக்சின் கொரோனா தடுப்பூசி போட அரசு அறிவுறுத்தியதின் பேரில் பெரம்பலூர் மாவட்டத்தில் 25 ஆயிரத்து 258 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 
பூஸ்டர் தடுப்பூசி 
தற்போது அரசு வழிகாட்டுதலின்படி, 2-வது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டு 9 மாதம் ஆன மருத்துவ பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் இணை நோய் உள்ள 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி கடந்த 10-ந்தேதி முதல் போடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வாரந்தோறும் வியாழக்கிழமை சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தது.
அதன்படி நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் 31 மையங்களில் நடந்த சிறப்பு முகாம்களில் 253 பேருக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டது. மாவட்டத்தில் இதுநாள் வரை 819 சுகாதாரப் பணியாளர்களுக்கும், 260 முன்களப்பணியாளர்களுக்கும், இணை நோய் உள்ள 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் 126 பேருக்கும் என மொத்தம் 1,205 பேருக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Next Story