வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 20 Jan 2022 7:01 PM GMT (Updated: 2022-01-21T00:31:34+05:30)

வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

நெல்லை:
கல்லிடைக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் பொன்சுந்தர் (வயது 26). இவர் மீது கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளதால், அவரை கல்லிடைக்குறிச்சி போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் பொன்சுந்தரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யுமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், மாவட்ட கலெக்டர் விஷ்ணுவுக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் அதனை ஏற்று பொன்சுந்தரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு கடிதத்தை பாளையங்கோட்டை மத்திய சிறையில் போலீசார் வழங்கினர்.

Next Story