மாவட்ட செய்திகள்

மரம் வெட்டும் தொழிலாளி கொலை + "||" + Murder of a lumberjack

மரம் வெட்டும் தொழிலாளி கொலை

மரம் வெட்டும் தொழிலாளி கொலை
மரம் வெட்டும் தொழிலாளி கொலை செய்யப்பட்டார்.
மங்களமேடு:

தகராறு
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள உள்ளியக்குடியை சேர்ந்தவர் காசிநாதன்(வயது 70). அதே ஊரைச் சேர்ந்தவர் சிங்காரம்(60). கூலித்தொழிலாளிகளான இவர்கள் 2 பேரும் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் மாக்காயிகுளம் கிராமத்தை சேர்ந்த மர வியாபாரியான மருதமுத்து என்பவரது வீட்டில் தங்கி மரம் வெட்டும் வேலையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் அங்கு நேற்று முன்தினம் இரவு காசிநாதனும், சிங்காரமும் குடிபோதையில் இருந்ததாகவும், அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
சாவு
இதில் கீழே விழுந்த காசிநாதனுக்கு தலையின் பின்பகுதியில் அடிபட்டு மூக்கு வழியாக ரத்தம் வந்துள்ளது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் காசிநாதனை மீட்டு சிகிச்சைக்காக அரியலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு டாக்டர் இல்லாததால் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்தபோது, காசிநாதன் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.
கைது
இதுகுறித்த தகவலின்பேரில் குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) ரஞ்சனா விசாரணை நடத்தி, வழக்குப்பதிவு செய்து சிங்காரத்தை கைது செய்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கல்லில் தலையை மோதி அக்காள் கணவர் கொலை
கல்லில் தலையை மோதி அக்காள் கணவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மைத்துனரை போலீசார் கைது செய்தனர்.
2. ஜம்மு-காஷ்மீர்: போராட்டம் நடத்திய காஷ்மீர் பண்டிட் ஊழியர்கள் மீது போலீசார் தடியடி; விசாரணைக்கு கவர்னர் உத்தரவு!
பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட காஷ்மீர் பண்டிட் ராகுல் பட் கொலையை கண்டித்து போராட்டம் நடத்திய காஷ்மீர் பண்டிட் ஊழியர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
3. கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பர் வெட்டிக் கொலை - டிரைவர் கைது....!
சென்னை அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பரை வெட்டி கொலை செய்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
4. ஆலங்குடி அருகே சொத்து பிரச்சினையில் விவசாயி அடித்துக்கொலை தம்பதிகள் கைது
ஆலங்குடி அருகே சொத்து பிரச்சினையில் விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதையடுத்து தம்பதிகளை போலீசார் கைது செய்தனர்.
5. வடமாநில வாலிபர் கழுத்தை அறுத்துக்கொலை
உளுந்தூர்பேட்டை அருகே வடமாநில வாலிபர் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டார். அவரது உடலை வீட்டில் புதைத்துவிட்டு மாயமான தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்