வண்டலூர் பூங்காவில் விலங்குகளுக்கு கொரோனா பாதிப்பு இல்லை - பூங்கா இயக்குனர் தகவல்


வண்டலூர் பூங்காவில் விலங்குகளுக்கு கொரோனா பாதிப்பு இல்லை - பூங்கா இயக்குனர் தகவல்
x
தினத்தந்தி 22 Jan 2022 12:17 PM GMT (Updated: 22 Jan 2022 12:48 PM GMT)

வண்டலூர் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பணிபுரியும் ஊழியர்கள் 76 பேருக்கு கொரனோ தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து பூங்கா கடந்த 17-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

பூங்கா ஊழியர்கள் 76 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் விலங்குகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையில் பூங்காவில் உள்ள எந்த விலங்குகளுக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூறிய வண்டலூர் பூங்கா இயக்குநர் 11 சிங்கம், 6 புலி, 4 சிறுத்தைக்கு கொரோன பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

Next Story