இதுவரை, 16½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி


இதுவரை, 16½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 22 Jan 2022 5:52 PM GMT (Updated: 22 Jan 2022 5:52 PM GMT)

சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 16½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 16½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. 

16½ லட்சம் பேருக்கு...

சிவகங்கை மாவட்டத்தில் 19-வது கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. சிவகங்கை சோலை நகரில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் மதுசூதன்ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜனவரி 16-ந்தேதி முதல் இந்த ஆண்டு 20-ந்தேதி வரை மொத்தம் 16 லட்சத்து 69 ஆயிரத்து 635 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் தவணை தடுப்பூசிகள் 9 லட்சத்து 99 ஆயிரத்து 136 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. அதில் 15 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட 49 ஆயிரத்து 145 பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.  

தடுப்பூசி இருப்பு

தற்போது கோவிஷீல்டு 69ஆயிரத்து 430 டோசும், கோவாக்சின் தடுப்பூசி 19 ஆயிரத்து 80 டோசும் சேர்த்து மொத்தம் 88 ஆயிரத்து 510 தடுப்பூசி மருந்துகள் கையிருப்பில் உள்ளது. கொரோனா நோய் தொற்றில் இருந்து முழுமையான பாதுகாப்பு பெற 15 வயதுக்கு மேற்பட்ட அனைத்து நபர்களும் முழுமையாக தங்களது முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி மருந்துகளை செலுத்திக்கொள்வது அவசியம். .இவ்வாறு அவர் கூறினார். 
இந்த ஆய்வின்போது நகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், பொது சுகாதாரத்துறை மருத்துவ அலுவலர் ஆருண், நகராட்சி நகர்நல மைய டாக்டர் கலாதேவி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story