புதுக்கோட்டையில் கொரோனாவுக்கு இளம்பெண் சாவு; பலி எண்ணிக்கை 422 ஆக உயர்ந்தது


புதுக்கோட்டையில் கொரோனாவுக்கு இளம்பெண் சாவு; பலி எண்ணிக்கை 422 ஆக உயர்ந்தது
x
தினத்தந்தி 22 Jan 2022 6:28 PM GMT (Updated: 2022-01-22T23:58:21+05:30)

புதுக்கோட்டையில் 244 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மேலும், இளம்பெண் ஒருவர் பலியானார். இதனால் பலி எண்ணிக்கை 422 ஆக உயர்ந்தது.

புதுக்கோட்டை, 
244 பேருக்கு தொற்று
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. சுகாதாரத்துறையினரால் வெளியிடப்படும் பட்டியலில் நேற்று ஒரே நாளில் 244 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்து 715 ஆக அதிகரித்துள்ளது. 
இதேபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 92 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 30 ஆயிரத்து 358 ஆக உயர்ந்தது.
இளம்பெண் சாவு
மாவட்டத்தில் கொரோனாவுக்கு 935 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் கொரோனா தொற்று பாதிப்புடன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனால் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 422 ஆக உயர்ந்தது. 
கொரோனா பாதிப்பில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சளி, காய்ச்சல் உள்பட கொரோனா அறிகுறி காணப்படுபவர்கள் உடனடியாக உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என ஏற்கனவே அரசு அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story