‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 23 Jan 2022 10:48 AM GMT (Updated: 2022-01-23T16:18:43+05:30)

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பள்ளம் உடனடி மூடல்

சென்னை கிண்டி மடுவங்கரை மசூதி காலனி புது தெருவில் ஒரு மாதத்துக்கு முன்பு கழிவுநீர் கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளம் மூடாமல் அப்படியே விடப்பட்டிருக்கும் செய்தி ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அந்த பள்ளம் உடனடியாக மூடப்பட்டுள்ளது. இந்த உடனடி நடவடிக்கைக்காக குடிநீர்-கழிவுநீர் அகற்று வாரிய அதிகாரிகளுக்கும், உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். பயன்பாடின்றி பாழாகும் பூங்கா

சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனி ‘டி’ பிளாக் பாண்டியன் தெருவில் (பாரதி பள்ளி அருகே) உள்ள சிறுவர் பூங்கா பல வருடங்களாக பராமரிப்பின்றி குப்பை கிடங்காக மாறி போயிருக்கிறது. குப்பை வண்டிகள் மட்டுமே இங்கே நிறுத்தப்பட்டு வருகின்றன. நடைபயிற்சிக்காக மக்கள் பயன்படுத்தி வந்த இந்த பூங்கா தற்போது சீரழிந்து கிடக்கிறது.

- பொதுமக்கள்.

நடவடிக்கை எடுக்கப்படுமா?

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டின் 18-ம் நுழைவுவாயில் அருகேயுள்ள காலி நிலப்பரப்பில் காய்கறி-பழ கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் துர்நாற்றம் மிகுதியாகி, அந்த வழியாக செல்வோர் மூக்கை பிடித்தபடியே செல்லவேண்டியது இருக்கிறது. எனவே மார்க்கெட் குப்பை கழிவுகளை நகருக்கு வெளியே சென்று கொட்டப்பட வேண்டும். இல்லையெனில் துர்நாற்றம் இல்லாதவாறு பார்த்துக்கொள்ளும் நடவடிக்கைகளை கையாள வேண்டும்.

- சமூக ஆர்வலர்.குழாயில் குடிநீர் வராததால் அவதி

சென்னை புளியந்தோப்பு கே.பி. பார்க் 7-வது பிளாக் பகுதியில் குடிநீர் குழாயில் தண்ணீர் சரிவர வருவதே கிடையாது. இதனால் இப்பகுதி மக்கள் இதர பகுதிகளுக்கு சென்று தண்ணீர் பிடிக்க வேண்டியதுள்ளது. அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எங்கள் பிரச்சினையும் தீர்ந்தபாடில்லை.

- சமூக ஆர்வலர்.

கேட்பாரற்று கிடக்கும் வாகனங்கள்

சென்னை சூளை ஹண்டர்ஸ் ரோடு மற்றும் காளத்தியப்பா தெரு சாலைகளில் பல வாகனங்கள் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பழுதடைந்து கிடக்கும் இந்த வாகனங்கள் கேட்பாரற்ற நிலையில் நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. தூய்மை பணியாளர்களும் முழுமையாக தங்கள் சேவையை செய்யமுடியாமல் இருக்கிறது.

சமூக ஆர்வலர்.குப்பை கழிவுகளால் அவதி

சென்னை சேத்துப்பட்டு பிருந்தாவனம் பகுதியில் இருந்து ரெயில்வே ஸ்டேஷன் போகும் வழியில் பெருமளவு குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளன. இதனால் அப்பகுதியே அலங்கோலமாக காட்சி தருகிறது. கொசுக்களும் அதிகளவில் படையெடுக்கின்றன. இதனால் துர்நாற்றம் சூழ்ந்து, பல்வேறு நோய்கள் பரவும் சூழலும் உருவாகி இருக்கிறது. இந்தநிலை இனியும் ஏற்படாமல் இருக்க ஒரே தீர்வு ரெயில்வே நடை மேம்பாலம் தான். தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுமா?

- சமூக ஆர்வலர்.

கழிவுநீர் பிரச்சினையால் தவிப்பு

சென்னை கொருக்குப்பேட்டை ஜே.ஜே.நகர் ஏ-2 தெருவில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு பாதாள சாக்கடை மூடி வழியாக கழிவுநீர் வெளியேறி சென்று கொண்டிருக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. துர்நாற்றமும் வீசுகிறது. பல்வேறு நோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இந்த பிரச்சினை சரிசெய்யப்படுமா?

- பொதுமக்கள்.நாய்கள் - மாடுகள் தொல்லை

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி 46-வது வார்டுக்குட்பட்ட அய்யன்குளம் முக்கிய வீதிகளில் நாய்கள் மற்றும் மாடுகள் தொல்லை அதிகமாக இருக்கிறது. இதனால் அப்பகுதிவாசிகள் சாலைகளில் நடந்து செல்லவே அச்சம் கொள்கிறார்கள். மக்கள் நலன் காக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமா?

- எஸ்.கோபாலன், ஆவடி.

கழிவுநீர் கால்வாய் அடைப்பு

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் தாலுகா பெரியார் நகர் 3-வது தெருவில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் கால்வாயில் குப்பை கழிவுகள் அதிகமாக தேங்கியதுடன், துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், பல்வேறு நோய்கள் உருவாகவும் வாய்ப்புள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

- பெரியார் நகர் மக்கள்.கொசுத்தொல்லையால் தூக்கம் போச்சு...

செங்கல்பட்டு மாவட்டம் புது பெருங்களத்தூர் பெரியார் தெருவில் கொசுத்தொல்லை மிகுதியாக இருக்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் தினமும் சிரமங்களை அனுபவித்து வருகிறார்கள். தினமும் தூக்கத்தை தொலைத்தும் தவித்து வருகிறார்கள். எனவே இந்த பகுதியில் கொசு மருந்து அடிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ஆர்.சிவகுமார்.


Next Story