குண்டடம் பகுதியில் பருத்தி சாகுபடி


குண்டடம் பகுதியில் பருத்தி சாகுபடி
x
தினத்தந்தி 24 Jan 2022 10:36 AM GMT (Updated: 24 Jan 2022 10:36 AM GMT)

குண்டடம் பகுதியில் பருத்தி சாகுபடி

குண்டடம் பகுதியில் நடப்பாண்டில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர்.
பருத்தி சாகுபடி
குண்டடம் பகுதியில் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு வரை ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு வந்தது. கரிசல் மண்ணில் பருத்தி அபாரமாக விளையும் என்பதால் விவசாயிகள் பருத்ததியை சாகுபடி செய்து வந்தனர். பின்னர் தண்ணீர் பற்றாக்குறை, பருத்தி பறிக்க ஆள் கிடைக்காமை, போதிய விலையின்மை உள்ளிட்ட காரணங்களால் பருத்தி சாகுபடி செய்வது படிப்படியாக குறைந்தது. தற்போது ஒரு சில ஏக்கரில் சாகுபடி என்ற நிலை ஏற்ப்பட்டது.
இந்த நிலையில் நடப்பாண்டில் நல்ல மழை பெய்துள்ளாதல் குண்டடம் பகுதியில் சிங்காரிபாளையம், எரகாம்பட்டி, ஒட்டபாளையம், உப்பாறு அணை, பனைமரத்துபளையம், தேர்பாதை, கெத்தல்ரேவ் உள்ளிட்ட கிராமங்களில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்துள்ளனர்.
இது பற்றி சிங்காரிபாளையத்தை சேர்ந்த விவசாயி கூறியதாவது
பூச்சி தாக்குதல்
பல வருடங்களுக்கு பின்னர் இந்த ஆண்டு குறிப்பிடத்தக்க அளவில் பருத்தி சாகுபடி செய்துள்ளோம். முன்புபோல அல்லாமல் பிடி ரக பருத்தியைத்தான் சாகுபடி செய்துள்ளோம். பிடி ரகம் என்பதால் காய்புழுக்கள் தாக்குதல் அதிகம் இல்லை. இருப்பினும் பூச்சி தாக்குதல் அதிகம் உள்ளதால் 6முறை மருந்து தெளிக்க வேண்டியுள்ளது.
உரம், உழவு, ஆட்கள் கூலி என ஏக்கருக்கு ரூ. 35ஆயிரம் செலவு செய்ய வேண்டியுள்ளது. நல்ல முறையில் விளைச்சல் இருந்தால் ஏக்கருக்கு 17குவிண்டால் மகசூல் கிடைக்கும். இந்த ஆண்டு செடிகளில் நல்ல முறையில் காய்கள் பிடித்துள்ளதால் பனிபொழிவின் பாதிப்பு ஏற்படாமல் இருந்தால் எதிர்பார்த்த மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது.அதேபோல் பருத்திக்கு நல்ல விலை கிடைக்குமானால் நல்ல லாபம் கிடைக்கும் என்றார்.


Next Story