திருக்கோவிலூர் அருகே மணல் கடத்தல் 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்

திருக்கோவிலூர் அருகே மணல் கடத்தல் 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 24 Jan 2022 4:25 PM GMT (Updated: 24 Jan 2022 4:25 PM GMT)

திருக்கோவிலூர் அருகே மணல் கடத்தல் 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள டி.தேவனூர் கிராம எல்லையில் அரகண்டநல்லூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 2 மாட்டு வண்டிகளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், துறிஞ்சல் ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, 2 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்த போலீசார், அவற்றை ஓட்டி வந்த அதேகிராமங்களை சேர்ந்த கண்ணன் மகன் சரவணன் (வயது 40), கலியமூர்த்தி மகன் கந்தசாமி (35) ஆகியோர் மீது வழக்குப்பதிவு  செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story