விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 24 Jan 2022 5:54 PM GMT (Updated: 24 Jan 2022 5:54 PM GMT)

விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூர்
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலையை 50 சதவீதம் குறைக்க வேண்டும். தொழிலாளர் 4 சட்ட தொகுப்புகளை வாபஸ் வாங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிப்படி 100 நாள் வேலை திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும். வீடு, வீட்டுமனை பட்டாவை அடிப்படை உரிமையாக்கி சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கரூர் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சாமான்ய மக்கள் நல கட்சி மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். இதில் சாமான்ய மக்கள் கட்சி, தமிழ் புலிகள் கட்சி, மக்கள் அதிகாரம், மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு ரெட் ஸ்டார், மே 17 இயக்கம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story