தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 24 Jan 2022 6:18 PM GMT (Updated: 24 Jan 2022 6:18 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:- 


புதர்கள் அகற்றப்படுமா?

கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நடுவட்டம் முதல் சூட்டிங் மட்டம் வரை சாலையின் இருபுறமும் புதர்கள் படர்ந்து காணப்படுகிறது. இதனால் போதிய இட வசதி இன்றி சாலையில் வாகன விபத்துக்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது.தொடர்ந்து மனித உயிர் இழப்புகளும் நடந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சாலையின் இருபுறமும் வளர்ந்துள்ள புற்களை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  சசிகுமார், நடுவட்டம்.

சுகாதார சீர்கேடு


  கோத்தகிரி பஸ் நிலையத்தில் இருந்து மாதா கோவில் செல்லும் சாலையோரத்தை பொதுமக்கள் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசி வருவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. அத்துடுன் தொற்றுநோய் ஏற்படும் அபாயமும் நீடித்து வருகிறது. எனவே இந்த சாலையோரத்தை திறந்தவெளி கழிப்பிடமாக மாற்றுவதை தடுத்து, இந்த செயலில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க வேண்டும்.
  தங்கவேல், கோத்தகிரி.

தெருநாய்கள் தொல்லை 

  கோத்தகிரி நகரின் முக்கியப் பகுதிகள் மற்றும் அரசு அலுவலக வளாகங்களில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. இவை ஒன்றோடொன்று சண்டையிட்டுக் கொண்டு, பொதுமக்களையும் கடிப்பதற்காக துரத்தி வருவதால் காலையில் நடைபயிற்சி செல் வோரும், பொதுமக்களும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து தெரு நாய்கள் தொல்லை யில் இருந்து பொதுமக்களை காப்பாற்ற வேண்டும்.
  புஷ்பகுமார், கோத்தகிரி.

நடைபாதை வசதி

  நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கன்னிகாதேவி காலனியில் ஏராளமானோர் வசித்து வருகிறார்கள். ஆனால் இங்கு நடைபாதை வசதி இல்லை. இந்த பகுதிக்கு செல்லும் பாதை கற்கள் நிறைந்து பாறை போன்று காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக நடந்து செல்லும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். சில நேரத்தில் அவர்கள் கீழே விழுந்து காயத்துடன் செல்லும் நிலை நீடித்து வருகிறது. எனவே அங்கு நடைபாதை அமைத்துக்கொடுக்க வேண்டும்.
  ரமேஷ்குமார், கோத்தகிரி.

குப்பை தொட்டி வேண்டும்

  கோவை உக்கடம் வின்சென்ட் ரோடு பகுதியில் குப்பைத்தொட்டி இல்லை. இதனால் குப்பைகள் ரோட்டில் கொட்டப்பட்டு வருகிறது. அந்த குப்பைகள் சுத்தம் செய்யப்படாததால் சுகாதார சீர்கேடு ஏற் பட்டு வருவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. அத்துடன் காற்று வீசும்போது பறந்து அருகில் உள்ள வீடுகளுக்குள் விழுகிறது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பைகளை சுத்தம் செய்வதுடன், குப்பை தொட்டி வைக்க வேண்டும்.
  பாரூக், உக்கடம்.

விபத்து ஏற்படும் அபாயம் 

  கோவை லங்கா கார்னர் பகுதியில் சாக்கடை கால்வாய் திறந்த நிலையில் காணப்படுகிறது. இதில் பிளாஸ்டிக் குப்பைகள் அதிக அளவு சேர்ந்துள்ளதால் அடைப்பு ஏற்பட்டு சாக்கடை நீர் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் அரசு ஆஸ்பத்திரி மற்றும் டவுன்ஹால் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் சந்திக்கும் இடத்தில் சாக்கடை கால்வாய் திறந்து கிடைப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  அப்துல் ரஹீம், கோட்டைமேடு.

போக்குவரத்து நெரிசல்

  பொள்ளாச்சி அன்சார் வீதியில் ஏராளமான கடைகள் உள்ளன. இந்த வீதியில் இருபுறத்திலும் வாகனங்கள் நிறுத்தி வைப்பதால், ஆட்டோக்கள் கூட செல்ல முடியாத அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் இந்த பகுதியை சேர்ந்தவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த வீதியில் வாகனங்கள் நிறுத்துவதை தடுத்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க வேண்டும்.
  முகைதீன், பொள்ளாச்சி.

மேம்பாலத்தில் வேகத்தடை

  பொள்ளாச்சி-கோட்டூர் மேம்பாலம் குறுகலாகவும், வளைவாகவும் இருக்கிறது. இதனால் இந்த பாலத்தில் வாகனங்கள் வேகமாக வரும்போது அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றன. எனவே இங்கு நடந்து வரும் விபத்துகளை தடுக்க வளைவாக இருக்கும் பகுதியில் வேகத்தடை அமைத்து வாகனங்களில் வேகத்தை குறைத்தால் விபத்து நடப்பதை தடுக்கலாம். அதற்கு அதிகாரிகள் வழிவகை செய்ய வேண்டும்.
  கதிரேசன், கோட்டூர்.

ஒளிராத மின்விளக்குகள்

  கோவை காந்திபுரம் மேம்பாலத்தில் ஏராளமான மின்விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதில் பாதிக்கும் மேற்பட்ட விளக்குகள் ஒளிருவது இல்லை. இதனால் இரவு நேரத்தில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். இது தொடர்பாக பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்விளக்குகளை ஒளிர செய்ய வேண்டும்.
  சந்தோஷ்குமார், கோவை.

தினத்தந்தி செய்தி எதிரொலி:
சிக்னலில் விளக்கு சரிசெய்யப்பட்டது

  கோவை அருகே பாப்பம்பட்டி பிரிவு உள்ளது. இந்த வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இங்குள்ள 4 ரோட்டில் இருந்த சிக்னலில் விளக்கு பழுதானதால் அது செயல் படாமல் இருந்தது. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்ததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். இது குறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன்பயனாக அதிகாரி கள் நடவடிக்கை எடுத்து சிக்னலில் விளக்கை சரிசெய்தனர். எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரி களுக்கும் நன்றி.
  ரஜினி செந்தில், பாப்பம்பட்டி.
  
  
  


Next Story