மதுரை ஐகோர்ட்டில் போலியான பெயரில் ரிட் மனு


மதுரை ஐகோர்ட்டில் போலியான பெயரில் ரிட் மனு
x
தினத்தந்தி 24 Jan 2022 8:17 PM GMT (Updated: 24 Jan 2022 8:17 PM GMT)

மதுரை ஐகோர்ட்டில் போலியான பெயரில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை, 

மதுரை ஐகோர்ட்டு பதிவாளர் பூர்ண ஜெயா ஆனந்த், மதுரை ஐகோர்ட்டு போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகாரில், “கடந்த 10-ந் தேதி மதுரை ஐகோர்ட்டு கிளையில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அது விசாரணைக்கு வந்த போது போலியானது என்று தெரியவந்தது. இவ்வாறு போலியான பெயரில் ரிட் மனு தாக்கல் செய்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்று தெரிவித்திருந்தார். 
இந்த புகார் தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த நபர் யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story