ஆழ்துளை கிணறு அமைக்கும்போது லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு


ஆழ்துளை கிணறு அமைக்கும்போது லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 25 Jan 2022 3:37 PM IST (Updated: 25 Jan 2022 3:37 PM IST)
t-max-icont-min-icon

ஆழ்துளை கிணறு அமைக்கும்போது லாரி தீப்பிடித்து எரிந்ததால் தீ கொழுந்து விட்டு எரிந்தது.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே சட்டமங்கலம் கிராமத்தில் உள்ள திடீர்நகரில் நேற்று வீடு கட்டுவதற்காக காலிமனையில் எந்திரம் மூலம் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென போர்வெல் லாரியில் இருந்து கரும்புகை வெளிவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அலறியடித்து ஓடினார்கள். லாரியின் பின்புறம் முழுவதும் தீ கொழுந்து விட்டு எரிந்தது.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த மறைமலைநகர் தீயணைப்பு நிலைய வீரர்கள் லாரியில் எரிந்த தீயை போராடி அணைத்தனர். இது குறித்து மறைமலைநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story