மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து இணையவழி மூலம் போட்டிகள்


மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து இணையவழி மூலம் போட்டிகள்
x
தினத்தந்தி 26 Jan 2022 7:25 PM GMT (Updated: 26 Jan 2022 7:25 PM GMT)

மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து இணையவழி மூலம் போட்டிகள் நடைபெறுகிறது

அரியலூர்
மது அருந்துவதாலும் மற்றும் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதாலும் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அரியலூர் மாவட்ட பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் விதமாக, இணையவழி மூலம் போட்டிகள் நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, மதுவினால் ஏற்படும் தீமைகள், சமூக கொண்டாட்டங்களும், மது ஏற்படுத்தும் விளைவுகளும் என்ற தலைப்பின் கீழ் ஓவியபோட்டி, கவிதை போட்டி, விழிப்புணர்வு வாசகம் (ஸ்லோகன்) எழுதும் போட்டி மற்றும் குறும்படங்கள் தயாரித்தல் ஆகிய போட்டிகள் நடத்தப்படுகிறது. போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் அரியலூர் மாவட்ட இணையதளமான https://ariyalur.nic.in-ல் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் முலம் தங்களது படைப்புகளை வருகிற 15-ந் தேதிக்குள் பதிவேற்றம் செய்யலாம். போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு கலெக்டர் தலைமையில் பரிசுகள் வழங்கப்படும். இந்த தகவலை அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.


Next Story