‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 26 Jan 2022 7:36 PM GMT (Updated: 26 Jan 2022 7:36 PM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

இடித்த கட்டிடம் அகற்றப்படுமா?
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்துள்ள நெட்டவேலம்பட்டி உயர்நிலைப்பள்ளியில் 3 கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. ஆனால்  மண்குவியல்கள், கம்பிகள் அப்படியே இருப்பதால், பள்ளி திறக்கப்படும் காலங்களில் மாணவர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. எனவே பள்ளி திறக்கும் முன் மண் குவியல்களை அகற்றி, சமன்படுத்தி தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லீலா, உப்பிலியபுரம், திருச்சி.
தெருநாய்கள் தொல்லை அதிகரிப்பு
திருச்சி மாவட்டம் முசிறி தொகுதிகுட்பட்ட கொளக்குடி, அப்பணநல்லூர் பஞ்சாயத்தில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சாலையில் செல்லும் சிறுவர்கள் மற்றும் முதியோர்களை அச்சுறுத்தி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்துல்லா, திருச்சி.
மின்கம்பத்தை மாற்ற கோரிக்கை
திருச்சி மாவட்டம் முசிறி நகராட்சி குப்பைக் கிடங்கு அருகில் அரசு அண்ணா கலைக்கல்லூரி செல்லும் சாலையில் போக்குவரத்து இடையூறாக சாலையின் நடுவில் உள்ள மின்கம்பத்தை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிருஷ்ணா, திருச்சி.
திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் கீழ கல்பாளையம் பகுதியில் உள்ள மின்கம்பம் மிகவும் பழுதடைந்து உள்ளது. இதனால் பலத்த காற்று வீசினால் இந்த மின்கம்பம் உடைந்து விழும் நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த மின்கம்பத்தை மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், திருச்சி.
சுகாதார சீர்கேடு
திருச்சி காந்திமார்க்கெட் அருகே உள்ள வளையல் காரத்தெருவில் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு உள்ளதால் கழிவுநீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. மேலும் கொசு தொல்லையும் அதிகரித்து உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாக்கடையில் ஏற்பட்டு உள்ள அடைப்புகளை அகற்றுவதுடன், அப்பகுதியில் கொசுமருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பூமிகா, திருச்சி.
திருச்சி மாவட்டம், அரியமங்கலம் கோட்டம், 22-வது வார்டு தோப்புத்தெரு விஸ்தரிப்பு பகுதியில் குப்பைகளை சேகரிக்க 5 நாட்களுக்கு ஒருமுறை தான் வருகிறார்கள். இதனால் வீட்டில் குப்பைகள் அதிகமாக சேர்ந்து கொசு உற்பத்தி ஆகிறது. மேலும், நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லீலா, திருச்சி.
மரட்டாறு தூர்வாரப்படுமா?
திருச்சி மாவட்டம் லால்குடி பஸ் நிலையத்திற்கு பின்புறம் மராட்டா ஆறு செல்கிறது. இதன் மூலம் ஏராளமான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்தநிலையில் மரட்டாறு தூர்வாரப்படாததால் கடைமடை விவசாயிகளுக்கு சரிவர தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும், மரட்டாறு ஆற்றில் சிலர் கழிவுகளை கலக்கிறார்கள். இதனால் சாக்கடை கலந்த ஆறாக மாறி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதனை தூர்வார வேண்டும்.
பானுமதி, திருச்சி.

Next Story