அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தில் பா.ஜ.க.வினர் தர்ணா


அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தில் பா.ஜ.க.வினர் தர்ணா
x
தினத்தந்தி 27 Jan 2022 4:58 PM GMT (Updated: 27 Jan 2022 4:58 PM GMT)

பிரதமர் மோடி உருவப் படம் எரிக்கப்பட்டதை கண்டித்து அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தில் பா.ஜ.க.வினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியாங்குப்பம், ஜன.
பிரதமர் மோடி உருவப் படம் எரிக்கப்பட்டதை கண்டித்து அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தில் பா.ஜ.க.வினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்ணா
டெல்லியில் நடந்த குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்தி புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து அரியாங்குப்பம் பிரம்மன் சதுக்கம் எதிரே பெரியார் சிந்தனையாளர் அமைப்பினர் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பிரதமர் மோடியின் உருவப்படம் தீவைத்து எரிக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதை அறிந்த பா.ஜ.க.வினர் நேற்று முன்தினம் மாலை அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வந்தனர். அவர்கள் திடீரென்று போலீஸ் நிலைய வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ., தங்க.விக்ரமன், மாநில கூட்டுறவு பிரிவு தலைவர் வெற்றிச்செல்வன், மணவெளி தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன், தொகுதி பிரமுகர் ரகுபதி, கலைவாணன்    உள்ளிட்ட 50-க்கும்     மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்பிறகு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
10 பேர் மீது வழக்கு
இந்த நிலையில் பிரதமர் மோடி உருவப்படத்தை தீவைத்து எரித்ததாக பெரியார் சிந்தனையாளர் இயக்க நிர்வாகிகள் தீனா, சந்திரன், பரத், சிவக்குமார், கண்ணன், தூயவன், கர்ணன், சூரியமூர்த்தி, மாத்தன், குரு ஆகிய 10 பேர் மீது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Next Story