காரில் குட்கா பதுக்கியவர் கைது


காரில் குட்கா பதுக்கியவர் கைது
x
தினத்தந்தி 27 Jan 2022 5:23 PM GMT (Updated: 27 Jan 2022 5:23 PM GMT)

காரில் குட்கா பதுக்கியவர் கைது செய்யப்பட்டார்.

ராமேசுவரம், 
ராமநாதபுரத்தில் இருந்து ராமேசுவரத்திற்கு கார் ஒன்றில் தடை செய்யப்பட்ட பான்மசாலா குட்கா பொருட்கள் கடத்தி வரப்படுவதாக நகர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து நகர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தனிப்பிரிவு காவலர் கில்டஸ், ராமமூர்த்தி உள்ளிட்டோர் தபால் நிலையம் எதிரே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ராமநாதபுரத்தில் இருந்து வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனை செய்ததில் அந்த காரில் தடை செய்யப்பட்ட குட்கா பான்மசாலா சுமார் 100 கிலோவுக்கு மேல் பதுக்கி கொண்டுவரப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து குட்கா போதை பொருளை பறிமுதல் செய்த போலீசார் அந்த காரை ஓட்டி வந்ததாக ராமநாதபுரம் பாரதி நகரை சேர்ந்த ஜெகன் (வயது38) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமேசுவரத்தில் கார் ஒன்றில் பறிமுதல் செய்யப்பட்ட இந்த பான் மசாலா குட்கா பொருட்கள் ராமேசுவரத்தில் உள்ள கடைகளில் கள்ளத்தனமாக விற்பனை செய்வதற்காக கொண்டுவரப்பட்டதா அல்லது ஏஜெண்டுகள் மூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story