அறுபடை வீடுகளுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள்


அறுபடை வீடுகளுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள்
x
தினத்தந்தி 27 Jan 2022 5:35 PM GMT (Updated: 27 Jan 2022 5:35 PM GMT)

பழனியில் இருந்து 2 பக்தர்கள் அறுபடை வீடுகளுக்கு பாதயாத்திரையாக புறப்பட்டு சென்றனர்.

பழனி: 

தமிழகத்தில் பழனி, திருச்செந்தூர், மருதமலை உள்ளிட்ட முருகன் கோவில்களுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று சாமி தரிசனம் செய்கின்றனர். இந்தநிலையில் உலக நலன் வேண்டி முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கும் பாதயாத்திரையாக செல்ல பழனி சின்னக்கலையம்புத்தூரை சேர்ந்த சுப்பிரமணி (வயது 50), அவரது நண்பர் வேடசந்தூர் நாகையக்கோட்டையை சேர்ந்த சுப்பையா (54) ஆகியோர் முடிவு செய்தனர். அதன்படி  அவர்கள் பழனியில் இருந்து பாதயாத்திரையாக புறப்பட்டனர்.

இதுகுறித்து சுப்பிரமணி கூறுகையில், உலக நலன் வேண்டி அறுபடை வீடுகளுக்கும் பாதயாத்திரையாக சென்று வழிபட உள்ளோம். அதன்படி பழனியில் இருந்து தாராபுரம், நாமக்கல், திருவண்ணாமலை வழியாக திருத்தணி சென்று வழிபட உள்ளோம். பின்னர் அங்கிருந்து சுவாமிமலை, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை என மீண்டும் பழனிக்கு வர உள்ளோம். சுமார் 1,400 கிலோமீட்டர் தூரத்தை 42 நாட்களில் பாதயாத்திரையாக சென்று வருவோம். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் அறுபடை வீடுகளுக்கும் பாதயாத்திரையாக சென்று வந்தோம் என்றார்.

Next Story