சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு


சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 27 Jan 2022 7:14 PM GMT (Updated: 2022-01-28T00:44:51+05:30)

வியாழக்கிழமையையொட்டி சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

திருக்கடையூர்:
வியாழக்கிழமையையொட்டி சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சிறப்பு வழிபாடு
திருக்கடையூரில் சாய்பாபா கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று வியாழக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. 
 இதனையொட்டி சாய்பாபாவுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதனை தொடர்ந்து பழவகைகள், இனிப்புகள் மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு சாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டது. 
இதில் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், கொரோனா முன் எச்சரிக்கையுடன் முககவசம் அணிந்து சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை அமிர்த சாய் அறக்கட்டளை மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Next Story