உத்தனப்பள்ளி அருகே மொபட் மீது லாரி மோதி காவலாளி சாவு


உத்தனப்பள்ளி அருகே மொபட் மீது லாரி மோதி காவலாளி சாவு
x
தினத்தந்தி 28 Jan 2022 5:20 PM GMT (Updated: 2022-01-28T22:50:16+05:30)

உத்தனப்பள்ளி அருகே மொபட் மீது லாரி மோதி காவலாளி இறந்தார்.

ராயக்கோட்டை:
உத்தனப்பள்ளி அருகே உள்ள பீர்ஜேப்பள்ளி அகரம் கிராமத்தை சேர்ந்தவர் பொம்மைய்யா (வயது 58). இவர் இவர் ஓசூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் காவலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு மொபட்டில் வந்தார். அப்போது சானமாவு வனப்பகுதி அருகே எதிரே வந்த லாரி மொபட் மீது மோதியதில் பொம்மைய்யா உயிரிழந்தார். இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story