மயிலாடுதுறை நகருக்கு நாளை குடிநீர் வினியோகம் கிடையாது

பராமரிப்பு பணி காரணமாக மயிலாடுதுறை நகருக்கு நாளை குடிநீர் வினியோகம் கிடையாது என்று நகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.
மயிலாடுதுறை:
பராமரிப்பு பணி காரணமாக மயிலாடுதுறை நகருக்கு நாளை குடிநீர் வினியோகம் கிடையாது என்று நகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.
நாளை குடிநீர் வினியோகம் கிடையாது
மயிலாடுதுறை நகரில் உள்ள பொதுமக்களுக்கு நகராட்சி திட்டத்தின் கீழ் கொள்ளிடம் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதற்காக மயிலாடுதுறை அருகே மணல்மேடு முடிகண்டநல்லூரில் கொள்ளிடம் ஆற்றில் உள்ள தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து குழாய்கள் மூலம் கொண்டு வரப்பட்டு நகரில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
தற்போது பிரதான குடிநீர் குழாய்களில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே அன்று ஒரு நாள் மட்டும் மயிலாடுதுறை நகரில் குடிநீர் வினியோகம் இருக்காது. எனவே நகராட்சி பொது மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. இந்த தகவலை நகராட்சி ஆணையர் பாலு தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story