புதிதாக 560 பேருக்கு கொரோனா


புதிதாக 560 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 28 Jan 2022 9:03 PM GMT (Updated: 2022-01-29T02:33:53+05:30)

மதுரை மாவட்டத்தில் நேற்று, புதிதாக 560 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

மதுரை,

மதுரை மாவட்டத்தில் நேற்று, புதிதாக 560 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் இதுவரை 88 ஆயிரத்து 242 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மதுரையில் நேற்று ஒரே நாளில் 683 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றனர். இதன் மூலம், இதுவரை 82 ஆயிரத்து 400 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். மதுரையில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 85 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இதுவரை 1210 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
தற்போது, மதுரை மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 632 ஆக உள்ளது. அவர்களில் 3 ஆயிரத்து 300 பேர் வீட்டு தனிமைப்படுத்துதலிலும், மீதமுள்ளவர்கள் கொரோனா கண்காணிப்பு மையங்கள், தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சையில் இருக்கிறார்கள். வெளி மாவட்டத்தைச் சேர்ந்த 57 பேரும் மதுரையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். அப்போது தான் கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும். வரும் காலங்களிலும் கொரோனா பாதிப்பு குறையும் என சுகாதாரத்துறையினர் நம்பிக்கை தெரிவித்தனர்.

Next Story