பேரறிவாளனுக்கு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை

பரோலில் வந்த பேரறிவாளனுக்கு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை
ஜோலார்பேட்டை
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே பழைய ஜோலார்பேட்டையை சேர்ந்தவர் குயில்தாசன். இவரது மகன் பேரறிவாளன் (வயது 51) முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகாலமாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.
சிறுநீரகத் தொற்று மற்றும் வயிறு சம்பந்தமான பாதிப்புகள் காரணமாக அவருக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டில் தங்கி டாக்டர்களின் ஆலோசனைபடி வேலூா், விழுப்புரம், தர்மபுரி உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அவ்வப்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
இவருக்கு 8 முறை பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று காலை 8.25 மணியளவில் பேரறிவாளனுக்கு சிறுநீரக தொற்று மற்றும் வயிறு சம்பந்தமாக சிகிச்சைக்காக வீட்டில் இருந்து வேலூர் ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமாறன் தலைமையில் தனிப்பிரிவு ஏட்டு திருக்குமரன் மற்றும் போலீசார் பலத்த காவலுடன் வேனில் சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு சிகிச்சை பெற்று பகல் 1.55 மணிக்கு ஜோலார்பேட்டை வந்தடைந்தனர்.
Related Tags :
Next Story