ரூ.12 கோடியே 44 லட்சம் மோசடி


ரூ.12 கோடியே 44 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 29 Jan 2022 4:16 PM GMT (Updated: 2022-01-29T21:46:04+05:30)

ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி ரூ. 12 கோடியே 44 லட்சம் மோசடி செய்ததாக திருச்சியை சேர்ந்தவர்கள் உள்பட 17 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சிவகங்கை, 
ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி ரூ. 12 கோடியே 44 லட்சம் மோசடி செய்ததாக திருச்சியை சேர்ந்தவர்கள் உள்பட 17 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அதிக லாபம்
திருச்சி பீமா நகரைச் சேர்ந்தவர் சாகுல்அமீது (வயது60) இவர் மற்றும் சிலர் திருச்சியில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தினார்கள். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகவும் நிலங்கள் மற்றும் வீட்டுமனைகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்கள்.
 இதை நம்பி காரைக்குடி கழனிவாசல் போய் சேர்ந்த ஹேமலதா உள்ளிட்ட சிலர் 2019-ம் ஆண்டு முதல் மேற்படி நிறுவனத்தில் அவர்களுக்கு தெரிந்தவர்களிடம் பணம் பெற்று கொடுத்துள்ளனர். இந்த வகையில் அவர்கள் ரூ. 12 கோடியே 44 லட்சத்து 22 ஆயிரத்து 700 வசூலித்தார்களாம். அதன் பின்னர் அவர்கள் பேசியபடி பணம் கொடுக்கவில்லையாம் இதைத்தொடர்ந்து ஹேமலதா சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்தார். 
வழக்குப்பதிவு
அவரது உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் விசாரணை நடத்தி சாகுல் அமீது, அவரது மனைவி மெகராஜ், மகன் பசீர் முகமது மற்றும் அறிவுமணி, சத்தியா, பாபு, சரிகாபேகம், செல்லையா, இளங்கோவன் உள்பட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
இந்த தகவல் அறிந்து நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்த திருப்பூர், கரூர், கோவை மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு ஊர்களை சேர்ந்த ஏராளமானவர்கள் நேற்றிரவு சிவகங் கையில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகம் முன்பாக கூடி நின்றார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story