பரமக்குடி நகராட்சியில் 83 வாக்குச்சாவடி மையங்கள்


பரமக்குடி நகராட்சியில் 83 வாக்குச்சாவடி மையங்கள்
x
தினத்தந்தி 29 Jan 2022 4:54 PM GMT (Updated: 29 Jan 2022 4:54 PM GMT)

பரமக்குடி நகராட்சியில் 83 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

பரமக்குடி, 
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி  நடைபெறுகிறது. இதற்காக பரமக்குடி நகராட்சியில் தேர்தல் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. பரமக்குடி நகராட்சியில் 80 ஆயிரத்து 26 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 39 ஆயிரத்து 453 பேர். பெண் வாக்காளர்கள் 40 ஆயிரத்து 563 பேர். மூன்றாம் பாலினத்தவர் 10 பேர். இங்கு 23 மையங்களில் 83 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படுகின்றன. இதில் பதற்றமான வாக்குச்சாவடி மையங்கள் 6 ஆகும். 
இங்கு பதிவாகும் வாக்குகள் பரமக்குடி அழகப்பா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பிப்ரவரி 22-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. நகராட்சி ஆணையாளரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான திருமால் செல்வம் தலைமையில், 4 உதவி தேர்தல் அலுவலர்களும், 7 மண்டல அலுவலர்களும், 7 மண்டல உதவி அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Next Story