தமிழக பக்தர்களையும் அனுமதிக்க வேண்டும்


தமிழக பக்தர்களையும் அனுமதிக்க வேண்டும்
x
தினத்தந்தி 29 Jan 2022 5:06 PM GMT (Updated: 29 Jan 2022 5:06 PM GMT)

கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு தமிழக பக்தர்களையும் அனுமதிக்க வேண்டும் என்று நவாஸ்கனி எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.

பனைக்குளம், 
கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு தமிழக பக்தர்களையும் அனுமதிக்க வேண்டும் என்று நவாஸ்கனி எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.
திருவிழா
ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கச்சத்தீவு அந்தோணியார் ஆலய வருடாந்திர திருவிழா எதிர்வரும் மார்ச் மாதம் 11 மற்றும் 12-ந் தேதிகளில் நடைபெறும் எனவும் இதில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்ட 500 பேருக்கு மட்டும் அனுமதி வழங்குவதாகவும், இந்திய பக்தர்களுக்கு இம்முறையும் அனுமதி மறுக்கப்படுவதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. 
கச்சத்தீவு அந்தோணியார் ஆலய வருடாந்திர திருவிழா குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் கலந்து கொள்ள விரும்பும் திருவிழாவாகும். இத்திருவிழாவில் தமிழக மீனவர்கள் உள்ளிட்ட பக்தர்கள் பங்கேற்க அனுமதி வழங்க வேண்டுமென மீனவர் சங்கங்கள் உள்ளிட்ட பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். 
நடவடிக்கை
கொரோனா பேரிடர் நிலைமை காரணமாக குறைவான பக்தர்களுக்கு அனுமதி வழங்குவதாக இருந்தால் அதில் தமிழக பக்தர்களையும் இணைத்து குறைவான அளவிலாவது தமிழக பக்தர்களும் இடம் பெற உரிய அனுமதியை பெற்று தர மத்திய அரசு இலங்கை அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி  கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Tags :
Next Story