ஆரணி நகராட்சி தேர்தலில் போட்டியிட சுயேச்சை வேட்பாளர் மனு தாக்கல்


ஆரணி நகராட்சி தேர்தலில் போட்டியிட சுயேச்சை வேட்பாளர் மனு தாக்கல்
x
தினத்தந்தி 29 Jan 2022 5:47 PM GMT (Updated: 29 Jan 2022 5:47 PM GMT)

ஆரணி நகராட்சி தேர்தலில் போட்டியிட சுயேச்சை வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

திருவண்ணாமலை

ஆரணி நகராட்சி தேர்தலில் போட்டியிட சுயேச்சை வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். 

 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 19-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. 

இதையொட்டி நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. 

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, வந்தவாசி, ஆரணி, திருவத்திபுரம் ஆகிய 4 நகராட்சிகளுக்கும் மற்றும் செங்கம், புதுப்பாளையம், போளூர், கண்ணமங்கலம், களம்பூர், சேத்துப்பட்டு, தேசூர், பெரணமல்லூர், கீழ்பென்னாத்தூர், வேட்டவலம் ஆகிய 10 பேரூராட்சிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. 

 போலீசார் பாதுகாப்பு

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அந்தந்த நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய மாவட்ட நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 

இதையொட்டி அலுவலகங்கள் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

2-வது நாளான நேற்று ஆரணி நகராட்சியில் 11-வது வார்டில் சுயேச்்சையாக போட்டியிட பாபு என்பவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

 வெறிச்சோடிய அலுவலகங்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் ஒருவர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால் நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

நாளை (திங்கட்கிழமை) தை அமாவாசை என்பதால் அன்றைய தினம் கட்சியினர் மற்றும் சுயேச்சையாக போட்டியிடுபவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று கருதப்படுகிறது.

Next Story