பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 30 Jan 2022 5:12 PM GMT (Updated: 2022-01-30T22:42:18+05:30)

பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

கரூர்
கரூர் வெங்கமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வெங்கமேட்டில் உள்ள ஒரு பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை செய்ததில் அங்கு பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட வெண்ணை மலையைச் சேர்ந்த ஒச்ச தேவர்(வயது 41), காதபாறையை சேர்ந்த ராமதுரை(46), பசுபதி பாளையத்தை சேர்ந்த ரமேஷ் (45), மாரிமுத்து(62), திண்டுக்கல் ரோட்டை சேர்ந்த மற்றொரு ரமேஷ்(42), வேலுச்சாமிபுரத்தை சேர்ந்த சக்திவேல்(48) ஆகிய 6 பேரை பிடித்து கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story