பின்னோக்கி சென்ற லாரி மரத்தில் மோதி கவிழ்ந்தது


பின்னோக்கி சென்ற லாரி மரத்தில் மோதி கவிழ்ந்தது
x
தினத்தந்தி 31 Jan 2022 8:31 AM GMT (Updated: 2022-01-31T14:01:51+05:30)

தேன்கனிக்கோட்டையில் பின்னோக்கி சென்ற லாரி மரத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் சர்க்கரை மூட்டைகள் சேதம் அடைந்தன.

தேன்கனிக்கோட்டை:-
திருப்பத்தூர் மாவட்டம் கேத்தாண்டப்பட்டியில் உள்ள சர்க்கரை ஆலையில் இருந்து சரக்கு லாரி ஒன்று சர்க்கரை மூட்டைகளை ஏற்றிக்கொண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டைக்கு வந்துள்ளார். லாரியை கோபால் ஓட்டி வந்தார். தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் எதிரே அரசு வாணிப கிடங்கில் சர்க்கரை மூட்டைகளை இறக்குவதற்காக வளாகத்தில் அவர் சரக்கு லாரியை நிறுத்தி உள்ளார்.
அப்போது திடீரென நிறுத்தப்பட்டு இருந்த சரக்கு லாரி தானாக பின்னோக்கி சென்றது. டிரைவர் கோபால் லாரியில் பிரேக் போட முயன்றும் லாரி பின்னோக்கி சென்று அங்குள்ள மரத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த சர்க்கரை மூட்டைகள் சிதறி வீணானது. இதில் டிரைவர் கோபாலுக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story