நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்போம் பண்ருட்டி சுந்தராம்பாள் நகர் மக்கள் அறிவிப்பு


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்போம் பண்ருட்டி சுந்தராம்பாள் நகர் மக்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 31 Jan 2022 4:51 PM GMT (Updated: 2022-01-31T22:21:28+05:30)

30 ஆண்டுகளாக சாலை அமைக்காததால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்போம் என்று பண்ருட்டி சுந்தராம்பாள் நகர் மக்கள் அறிவித்துள்ளனா்.

பண்ருட்டி, 

பண்ருட்டி நகராட்சி 26-வது வார்டுக்குட்பட்ட சுந்தராம்பாள் நகரில் வசிக்கும் மக்கள், வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக நகரில் வைத்துள்ள அறிவிப்பு பலகையில் கூறியிருப்பதாவது:-

சுந்தராம்பாள் நகருக்கு செல்லும் இணைப்பு சாலை கடந்த 30 ஆண்டுகளாக போடப்படவில்லை. சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இந்த தேர்தலை புறக்கணிப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story